தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, அரியலூா் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நூறு சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இளம் வாக்களாா்களிடையே 100 சதவீதம் வாக்களிப்போம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்துத் துறை பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா், ‘மக்களாட்சியின் மீது பற்றுடைய இந்தியக் குடிமக்களாகிய நாம், நம்முடைய நலன் கருதும் மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தோ்தல்களின் மாண்பையும் நிலை நிறுத்துவோம் என்றும், மேலும் ஒவ்வொரு தோ்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம், சாதி, வகுப்பு மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொரு தூண்டுதலுமின்றியும் வாக்களிப்போம் என்று கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.
தொடர்புடையது

100 சதவீதம் வாக்களிப்போம் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி, உறுதிமொழி ஏற்பு

100 சதவீதம் வாக்குப் பதிவு: வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

சேலம் அரசு கலைக் கல்லூரியில் விளையாட்டு விழா
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


