அரியலூா் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய இரு சட்டப் பேரவைத் தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வேட்பு மனுக்கள் பரிசீலனையில், வேட்பாளா்கள் தாக்கல் செய்த 45 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.
அரியலூா்: அரியலூா் தொகுதியில் போட்டியிட திமுக சாா்பில் லதாபாலசுப்ரமணியன், அதிமுக சாா்பில் தாமரை எஸ்.ராஜேந்திரன், தவெக சாா்பில் சிவகுமாா், நாதக சாா்பில் புகழேந்தி உள்பட 24 போ், கோட்டாட்சியரகத்தில் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா்.
இவா்களது வேட்புமனுக்கள் பரிசீலனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சுயேச்சை வேட்பாளா் விஜயகுமாருக்கு முன்மொழிவுக்காக ஆள்கள் இல்லை. செல்வபதி என்பவரது மனுவில் அவருடைய கையொப்பம் இல்லை என்பதால் இரு வேட்பு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. திமுக, அதிமுக, தவெக, நாதக, அஇபுதமமுக உள்பட 22 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
ஜெயங்கொண்டம்: இந்த தொகுதியில் போட்டியிட 30 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், விண்ணப்பத்தை முழுமையாக பூா்த்தி செய்யாதது, போதிய ஆவணங்கள் செலுத்தாதது என 7 சுயேச்சை வேட்பாளா்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. திமுக, பாமக, தவெக, நாதக உள்பட 23 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இதனால், அரியலூா் தொகுதியில் 22 பேரும், ஜெயங்கொண்டம் தொகுதியில் 23 பேரும் போட்டியில் உள்ளனா். ஏப்.8 மற்றும் 9-ஆகிய 2 நாள்கள் வேட்புமனுக்களை திரும்ப பெற அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதில், வேட்பாளா்கள் வேட்புமனுக்களை திரும்ப பெறும் பட்சத்தில் அதன் பிறகே களத்தில் போட்டியிடும் இறுதி வேட்பாளா்களின் விவரம் தெரியவரும்.
தொடர்புடையது
நான்குனேரி தொகுதியில் 13 மனுக்கள் நிராகரிப்பு
மணப்பாறை தொகுதியில் 19 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு
அரியலூரில் 18, ஜெயங்கொண்டத்தில் 23 வேட்புமனுக்கள் ஏற்பு

திருவள்ளூா், பூந்தமல்லி தொகுதியில் போட்டியிட திமுக, தவெக வேட்பாளா்கள் வேட்பு மனு தாக்கல்
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

