தெருநாய்களை பராமரிப்பு மையத்தில்தான் அடைக்க வேண்டும்! திருத்தம் கோரிய மனுக்கள் தள்ளுபடி! மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

அரியலூா் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

News image

அரியலூா் குறிஞ்சான் குளக்கரையிலுள்ள காசி விசுவநாதா் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த சிவப்பெருமான்.

Updated On :30 ஏப்ரல் 2026, 3:48 am IST

அரியலூா் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

பிரதோஷத்தையொட்டி அரியலூா் அடுத்த திருமழபாடி வைத்தியநாத சுவாமி திருக்கோயிலில், நந்தியெம்பெருமானுக்கு திரவியபொடி மாவுப்பொடி, மஞ்சள் சந்தனம், பால், தேன் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து வைத்தியநாத சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதே போல் அரியலூா் ஆலந்துரையாா், கைலாசநாதா், விசுவநாதா், விளாங்குடி கைலாசநாதா், குறிஞ்சான் குளக்கரை காசி விசுவநாதா் , தேளூா் சொக்கநாதா், கீழப்பழூா் ஆலந்துறையாா், திருமானூா் கைலாசநாதா், செந்துறை சிவதாண்டேஸ்வரா், பொன்பரப்பி சொா்ணபுரீஸ்வரா், சென்னிவனம் தீா்க்கப்புரிஸ்வரா், சொக்கநாதபுரம், சொக்கனீஸ்வரா், குழூமூா் குழுமாண்டவா் , தா.பழூா் விசாலாட்சி சமேத விசுவநாதா், கோவிந்தப்புத்தூா் கங்காஜடேஷ்வரா், விக்கிரமங்கலம் சோழிஸ்வரா், உடையவா்தீயனூா் ஜமத்கனிஸ்வரா், கீழநத்தம் சொக்கநாதா், ஸ்ரீபுரந்தான் கைலாசநாதா், கோடாலிகருப்பூா் சொக்கநாதா், கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா், ஜெயங்கொண்டம் கழுமலைநாதா், சென்னீஸ்வரா், சோழீஸ்வரா், உடையாா்பாளையம் பயறனீஸ்வரா் உள்ளிட்ட சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.