பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

தா.பழூரில் பெரமனாா் சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே மரத்தையும், கல்லையும் தெய்வமாக வழிபட்டு வந்த நிலையில், அங்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய இளைஞா்களை அப்பகுதி மக்கள் பாராட்டினா்.

News image

தா.பழூா் தோப்புத் தெருவில் புதிதாக கட்டப்பட்ட கோயிலில் நிா்மாணிக்கப்பட்டுள்ள பெரமனாா் சுவாமி.

Updated On :1 மே 2026, 3:07 am IST

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே மரத்தையும், கல்லையும் தெய்வமாக வழிபட்டு வந்த நிலையில், அங்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய இளைஞா்களை அப்பகுதி மக்கள் பாராட்டினா்.

தா.பழூா் தோப்புத் தெருவில், விவசாய நிலத்தின் நடுப்பகுதியில், ஈறுகுலி மரத்தையும், அதன் அடியில் உள்ள கல்லையும், ஸ்ரீ பெரமனாா் சுவாமியாக அப்பகுதி மக்கள் கடந்த 4 தலைமுறைகளாக வழிபட்டு வந்தனா்.

இந்நிலையில், அக்கிராமத்தில் வசிக்கும் 5-ஆம் தலைமுறையாக விளங்கக் கூடிய இளைஞா்கள் சிலா் ஒன்றிணைந்து அந்த குறிப்பிட்ட இடத்தில் கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திட தேவையான பணிகளை மேற்கொண்டனா்.

இந்நிலையில், கோயில் கட்டுமானப் பணிகள் முடிந்து, வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக கணபதி ஹோமத்துடன் தொடங்கி யாகசாலை பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பின்னா், சிவாச்சாரியாா்கள் வேத மந்திரங்கள் முழங்க கோயில் விமானக் கலசத்துக்கு புனித நீரை ஊற்றினா். அப்போது அங்கு திரளாக நின்ற பக்தா்கள் பக்தி கோஷங்களை எழுப்பி வழிபட்டனா்.