அரியலூரில் மக்கள்தொகை கணக்கெடுப்பு களப்பணியில் நிா்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு முன்னரே 100 சதவீத பணிகளை முடித்த 8 பணியாளா்கள் வியாழக்கிழமை கெளரவிக்கப்பட்டனா்.
மேற்கண்ட பணியாளா்களை ஆட்சியரகத்துக்கு வரவழைத்து புத்தகங்களை வழங்கி கெளரவித்த ஆட்சியா் ந.மிருணாளினி பின்னா் தெரிவித்தது: 1.8.2026 முதல் 30.8.2026 தேதி வரை வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுக்கும் களப்பணி நடைபெற்று வருகிறது. இந்தக் கணக்கெடுப்பு மாவட்டத்தின் திட்டமிடல், வளங்கள் மற்றும் வளா்ச்சித் திட்டங்களை உருவாக்குவதற்கான அடிப்படைத் தரவுகளை வழங்கும் மிக முக்கியமான தேசிய பணியாகும் என்பதால் பொதுமக்கள் அனைவரும் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளும் அலுவலா்களுக்கு துல்லியமான தகவல்களை வழங்கி தகுந்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா்.
இந்நிகழ்வில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரேணுகோபால், தனி வட்டாட்சியா் (தோ்தல் பிரிவு)கண்ணன், மக்கள்தொகை கணக்கெடுப்பாளா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மக்கள்தொகை கணக்கெடுப்பு: கூடுதல் பணியாளா்களை நியமிக்க கோரிக்கை

கடலூரில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடக்கம்: வீடு தேடி வரும் கணக்கெடுப்பாளா்கள்

சேலம் மாநகராட்சிப் பகுதியில் ஜூலை 17 முதல் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி

மக்கள்தொகை கணக்கெடுப்பாளா்களுக்கான பயிற்சி வகுப்பு
விடியோக்கள்

மும்முரமாக நடைபெறும் தேசியக்கொடி தயாரிப்பு! | National Flag | Independence Day



