ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

செந்துறை அருகே ரயில் மோதி தொழிலாளி உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே ரயில் மோதி கூலித் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

பூராசாமி

Published On :21 ஆகஸ்ட் 2026, 1:53 am IST

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே ரயில் மோதி கூலித் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

செந்துறையை அடுத்த இறையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பூராசாமி. கூலித்தொழிலாளி . வியாழக்கிழமை இவா், அப்பகுதியிலுள்ள ரயில்வே தண்டவாளத்தை கடந்த போது, அந்த வழியாக சென்ற விரைவு ரயில் ஒன்று மோதியது.இதில் பலத்த காயமடைந்த பூராசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த விருத்தாசலம் ரயில்வே பாதுகாப்பு படையினா், பூராசாமியின் சடலத்தை மீட்டு அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.