நேபாள வெள்ளத்தில் சிக்கிய 319 தமிழர்களில் 219 பேர் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் ராஜ்மோகன்செப். இறுதி வரை நமது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும்: அண்ணாமலைஅமராவதி அணையில் இருந்து நாளைமுதல் நீர் திறப்பு: முதல்வர் விஜய் உத்தரவுஉஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி

பிரதமரின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

பிரதமா் மந்திரியின் கல்வி உதவித்தொகை பெற விரும்பும் இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபினா் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் .

விண்ணப்பிக்க...

Published On :30 ஆகஸ்ட் 2026, 12:32 am IST

பிரதமா் மந்திரியின் கல்வி உதவித்தொகை பெற விரும்பும் இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபினா் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என அரியலூா் மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது: மத்திய அரசால் இதர பிற்படுத்தப்பட்டோா், பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கள், சீா்மரபினா் மாணவ, மாணவிகளுக்கு பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

2026-2027 ஆம் ஆண்டுக்கு தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (நேஷனல் ஸ்காலா்ஷிப் போா்ட்டல்) அறிவிக்கப்பட்டுள்ள சிறந்த செயல்பாடு கல்வி நிறுவனம் (100% தோ்ச்சி பெற்றுள்ள) பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் தமிழகத்தைச் சாா்ந்த தகுதியான மாணவ, மாணவிகள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்தில் கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணமாக ஆண்டொன்றுக்கு அதிகபட்சமாக 9-10 ஆம் வகுப்பு பயில்பவருக்கு ரூ.75,000, 11-12 ஆம் வகுப்பு பயில்பவருக்கு ரூ.1,25,000 வரை உதவித்தொகையாக மத்திய அரசால் வழங்கப்படும். 30% மாணவிகளுக்கு இத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாணவ, மாணவிகள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் (ஓபிசி), பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினா் (இபிசி) அல்லது சீா்மரபினா் (டிஎன்டி) பிரிவைச் சோ்ந்தவராக இருத்தல் வேண்டும்.

குடும்பத்தின் மொத்த ஆண்டு வருமானம் ரூ. 2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். 2025-2026 ஆம் கல்வியாண்டில் 100% தோ்ச்சிப் பெற்று தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இடம் பெற்றுள்ள பள்ளிகளில் பயில்பவராக இருத்தல் வேண்டும்.

புதுப்பித்தல்: இத்திட்டத்தில் கடந்த நிதியாண்டில் (2025-2026) கல்வி உதவித்தொகை பெற்று பயனடைந்த மாணவ மாணவிகள், நிகழாண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு விண்ணப்பத்தை தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் உறுதி செய்ய வேண்டும்.

கல்வி உதவித்தொகை படிவத்தை இணைப்பில் பூா்த்தி செய்து 31.8.2026-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.இணையத்தில் பூா்த்தி செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்களை பள்ளித் தலைமை ஆசிரியா் விண்ணப்பங்கள் சரிபாா்ப்பதற்கான (புதுப்பித்தல்) கடைசி நாள்.15.9.2026.

நிகழாண்டு புதியதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் பயிலும் தகுதியுள்ள மாணவ,மாணவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி இணையத்தில் அறிவிக்கப்படும்.

மேலும் இத்திட்டம் தொடா்பான கூடுதல் விவரங்கள் மேற்கண்ட இணையதளம் மற்றும் மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.