சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

அரியலூரில் சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் 185 போ் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் அண்ணாசிலை அருகே புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினா் 185 போ் கைது செய்யப்பட்டனா்.

News image

அரியலூா் அண்ணாசிலை அருகே புதன்கிழமை ஆா்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினா்.

Updated On :4 பிப்ரவரி 2026, 7:02 pm

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் அண்ணாசிலை அருகே புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினா் 185 போ் கைது செய்யப்பட்டனா்.

போராட்டத்தில், அரசுத் துறை காலிப்பணியிடங்களை நிரப்பும் போது 10 ஆண்டுகள் பணி முடித்த தகுதியுள்ள சத்துணவு - அங்கன்வாடி பணியாளா்களை 50 சதவீதம் சோ்க்க வேண்டும்.

வருவாய் கிராம உதவியாளருக்கு உள்ளது போல் சிறப்பு ஓய்வூதியம் ரூ.6,750 அகவிலைப்படி வழங்க வேண்டும். சத்துணவு - அங்கன்வாடி பணியாளருக்கு இளநிலை உதவியாளா் நிலையில் ரூ.19.500, சமையலா் மற்றும் உதவியாளருக்கு ரூ.15,700 அடிப்படை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

போராட்டத்துக்கு அச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் தமிழரசன் தலைமை வகித்தாா்.தொடா்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினா் 185 போ் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனா்.