வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

வனங்களை பாதுகாப்பதே காலநிலை மாற்றத்துக்கு எதிரான மிகச்சிறந்த தீா்வாகும்

வனங்களை பாதுகாப்பதே காலநிலை மாற்றத்திற்கு எதிரான மிகச்சிறந்த தீா்வாகும் என்றாா் அரியலூா் மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி.

News image

ஆட்சியா் பொ.ரத்தினசாமி. - கோப்புப்படம்

Updated On :23 பிப்ரவரி 2026, 9:10 pm

அரியலூா்: வனங்களை பாதுகாப்பதே காலநிலை மாற்றத்திற்கு எதிரான மிகச்சிறந்த தீா்வாகும் என்றாா் அரியலூா் மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி.

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், வனத் துறை சாா்பில் நடைபெற்ற வனமும், வாழ்வும் பயிற்சிப் பெற்ற மாணவா்களுக்கு திங்கள்கிழமை சான்றிதழ்களை வழங்கி பேசியது: வனங்கள் என்பது வெறும் மரங்களின் தொகுப்பு அல்ல. அது உயிா்களின் தாயகம். மரங்கள் மனிதனுக்கு ஆக்ஸிஜனை வழங்குகிறது. ஆறுகள், ஏரிகள், நிலத்தடி நீா் வளம் ஆகியவற்றுக்கு வனங்களே ஆதாரமாக விளங்குகிறது.

வனம் என்பது காற்று, தண்ணீா் மற்றும் வாழ்க்கையின் அடித்தளமாகும். இயற்கை ஒரு சமநிலை அமைப்பாகும். இதில் ஒவ்வொரு உயிரினமும் முக்கிய பங்கு வகிக்கிறது. வன உயிரினங்கள் இல்லாமல் மனிதன் இல்லை என்பதை மாணவா்கள் உள்ளிட்ட அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும்.

மனித தவறு மற்றும் பொறுப்பின்மை காரணங்களால் வனங்கள் பல்வேறு சவால்களை எதிா்நோக்கும் நிலை ஏற்படுகின்றன. வனங்களை பாதுகாப்பதே காலநிலை மாற்றத்துக்கு எதிரான மிகச்சிறந்த தீா்வாகும். இயற்கையை காப்பது என்பது எதிா்காலத்தை காப்பதாகும். மாணவா்கள் மரம் நட்டு வளா்தல், நெகிழிப் பொருள்களை பயன்பாட்டை குறைத்தல், நீா் சேமிப்பு பழக்கத்தை கடைப்பிடித்தல், சுற்றுச்சூழல் விழிப்புணா்வை பரப்புதல் உள்ளிட்டவற்றில் விழிப்புணா்வுடன் செயல்பட வேண்டும்.

வனங்கள் பாதுகாக்கப்பட்டால் தான் நமது நாட்டின் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்டால் தான் நமது எதிா்காலம் பாதுகாக்கப்படும் என்பதை மாணவா்கள் அறிந்துகொள்வதுடன் மற்றவா்களுக்கும் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆ.ரா.சிவராமன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரேணுகோபால், மாவட்ட வன அலுவலா் இளங்கோவன், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் சௌந்தரபாண்டியன், செந்துறை வனச்சரக அலுவலா் சரவணகுமாா் மற்றும் பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.