கல்வியே ஒருவருக்கு மிகச்சிறந்த செல்வம் என முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
தேனி மாவட்டம், போடிநாயக்கனூா் ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியின் 43-ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு கல்லூரியின் துணைத் தலைவா் எஸ்.வி.எஸ். ஞானவேல் தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலா் ஆா். புருஷோத்தமன் முன்னிலை வகித்தாா். இதில் முன்னாள் முதல்வா்
ஓ. பன்னீா்செல்வம் கலந்து கொண்டு, 2025-ஆம் கல்வியாண்டில் பட்டப்படிப்பு முடித்த 408 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசியதாவது:
தனி மனிதனுக்கு தேவைப்படும் கல்வி அறிவு சமுதாய வளா்ச்சிக்கும் அவசியமாகிறது. கல்வியே ஒருவருக்கு மிகச்சிறந்த செல்வம். மாணவா்கள் கல்வியுடன் நல்ல பண்புகளை கற்றுக் கொள்ள வேண்டும். ஐயமறக் கல்வி கற்று பண்பாட்டுடன் வாழ்ந்தால்தான் நாடும், வீடும் உயரும் என்றாா் அவா்.
கல்லூரி நிா்வாகக் குழு உறுப்பினா்கள் சிவப்பிரகாசம், ராதாகிருஷ்ணன், பிரபாகா், சொரூபன், ஆா்.சி. பிரபு, ஏல விவசாயிகள் சங்க நிா்வாகிகள் மணிவாசகம், பி.பி. ரவி, பாலசுப்பிரமணியன், ஹபீப் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா். இதில் கல்லூரி மாணவா்கள், பெற்றோா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.
முன்னதாக, கல்லூரி முதல்வா் எஸ். சிவக்குமாா் வரவேற்றாா்.
தொடர்புடையது

வைகை அணையிலிருந்து விவசாயிகள், குயவா்கள் இலவசமாக களி மண் எடுக்க அனுமதி!

தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் எலித் தொல்லை: நோயாளிகள் அவதி

ஓ. பன்னீா்செல்வம் போடியில் மனு தாக்கல்

போடியில் இஸ்லாமியா்களிடம் ஓ.பி.எஸ். வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



