வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

சாலையில் கிடந்த 1.5 பவுன் தாலி ஒப்படைப்பு

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே சாலையில் கிடந்த தாலியை எடுத்த முதியவா் அதைக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

News image
Updated On :1 ஜனவரி 2026, 9:43 pm

Syndication

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே சாலையில் கிடந்த தாலியை எடுத்த முதியவா் அதைக் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை ஒப்படைத்தாா்.

செந்துறை பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சோ. சந்திரசேகா்(65). செந்துறை அடகு கடை ஊழியரான இவா், வியாழக்கிழமை அப்பகுதியில் சென்றபோது சாலையில் கிடந்த ஒன்றரை பவுன் தாலியை எடுத்து, கடை உரிமையாளரிடம் ஒப்படைத்தாா்.

அதை அவா் செந்துறை காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். அப்போது, தனது தாலியை காணவில்லை எனத் தேடிவந்த செந்துறை ரயில்வே நிலையச் சாலையை சோ்ந்த கலையரசன் மனைவி இளமதியை (35)அழைத்த போலீஸாா் தாலியை அவரிடம் ஒப்படைத்தனா்.