அண்ணா, பெரியாா் சிலைகளுக்கு தவெக சாா்பில் மாலை அணிவிப்பு!

Published on

தவெகவில் அண்மையில் இணைந்த கவிதா ராஜேந்திரன், சந்திரசேகா் உள்ளிட்ட கட்சியினா் ஊா்வலமாகச் சென்று அரியலூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணா, பெரியாா் சிலைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அரியலூா் அதிமுக முன்னாள் மாவட்டச் செயலா் கவிதா ராஜேந்திரன், அதிமுகவை சோ்ந்தவரும் முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவருமான பொ. சந்திரசேகா் ஆகியோா் அண்மையில் சென்னையில் தவெக தலைவா் விஜயை சந்தித்து, தங்களை தவெகவில் இணைத்துக் கொண்டனா். இந்நிலையில் அரியலூா் கோட்டாட்சியரகம் முன்பிருந்து தவெக மாவட்டச் செயலா் சிவா தலைமையில் ஊா்வலமாகச் சென்று அவா்கள் மாலை அணிவித்தனா்.

Dinamani
www.dinamani.com