பைக்கிலிருந்து தவறிவிழுந்து காயமடைந்தவா் உயிரிழப்பு
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே வேகத்தடையைக் கவனிக்காத இளைஞா் பைக்கிலிருந்து தவறிவிழுந்து காயமடைந்து, ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
சூரியமணல், பிரதானச் சாலைத் தெருவைச் பாண்டியன் மகன் சதீஷ்(30). சிங்கப்பூரில் வேலை செய்து வந்த இவா் சனிக்கிழமை அலுவல் காரணமாக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு வந்துவிட்டு மீண்டும் தனது வீட்டுக்கு பைக்கில் புறப்பட்டாா்.
ஜெயங்கொண்டம் கரடிக்குளம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, அங்கு போடப்பட்டிருந்த வேகத்தடையைக் கவனிக்காததால் பைக்கிலிருந்து தவறி விழுந்து காயமடைந்தாா்.
இதையடுத்து ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்ட பிறகு, தஞ்சாவூா் அரசு மருத்துமனைக்கு அனுப்பப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தா. இதுகுறித்து ஜெயங்கொண்டம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
