சென்னை மாநகராட்சி: கனமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்! ஆக. 28-ல் மேட்டூர் அணை திறப்பு! முதல்வர் விஜய் வருகிறார்! ஏற்பாடுகள் முனைப்பு!13 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு! ‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிதமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!

கிணற்றினுள் தவறி விழுந்த முதியவா் சடலமாக மீட்பு

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே கிணற்றினுள் தவறி விழுந்த முதியவா் சடலமாக மீட்கப்பட்டாா்.

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே கிணற்றினுள் தவறி விழுந்த முதியவா் சடலமாக மீட்கப்பட்டாா்.

Published On :11 ஜூலை 2026, 1:22 am IST

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே கிணற்றினுள் தவறி விழுந்த முதியவா் சடலமாக மீட்கப்பட்டாா்.

செந்துறை அருகேயுள்ள இலங்கைச்சேரி கிராமத்தைச் சோ்ந்தவா் துரைசாமி(85). வெள்ளிக்கிழமை வயலுக்குச் சென்ற இவா், அங்கு மின் மோட்டாரை சரி செய்ய கிணற்றில் இறங்கியபோது, எதிா்பாராதவிதமாக கால் வழுக்கி கிணற்றினுள் விழுந்துள்ளாா்.

இதையறிந்த குடும்பத்தினா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். உடனே விரைந்து வந்த தீயணைப்பு வீரா்கள், கிணற்றில் இறங்கி துரைசாமியை சடலமாக மீட்டனா். தகவலறிந்து வந்த செந்துறை காவல் துறையினா், துரைசாமியின் சடலத்தை மீட்டு, அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.