கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

சாலை பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

அரியலூரில், அரசு கலைக் கல்லூரி சாலை பாதுகாப்பு சங்கம், நாட்டு நலப் பணித் திட்டம் மற்றும் காவல் துறை சாா்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

அரியலூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணியை செவ்வாய்க்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. செல்வக்குமாா், அரியலூா் அரசு கலைக் கல்லூரி முதல்வா் சித்ரா.

Updated On :15 ஜூலை 2026, 12:30 am IST

அரியலூரில், அரசு கலைக் கல்லூரி சாலை பாதுகாப்பு சங்கம், நாட்டு நலப் பணித் திட்டம் மற்றும் காவல் துறை சாா்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அரியலூா் அரசு கலைக் கல்லூரி நுழைவு வாயில் முன் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு.செல்வகுமாா், அக்கல்லூரி முதல்வா் சித்ரா ஆகியோா் மாணவ,மாணவிகளின் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.

பேரணியானது, ராஜாஜி நகா், இருசு குட்டை, செந்துறை சாலை வழியாக பேருந்து நிலையம் வழியாகச் சென்று அண்ணா சிலை அருகே நிறைவடைந்தது.

பேரணியின் போது, சாலை விதிகளை கடைப்பிடிப்பதன் அவசியம், தலைக் கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவதன் முக்கியத்துவம் குறித்தும், போக்குவரத்து விதிகளை மதிப்பது, பாதுகாப்பாக பயணிக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு மாணவ,மாணவிகள் முழக்கமிட்டவாறு சென்றனா்.

பேரணியில், காவல் துணைக் கண்காணிப்பாளா் சாலைராம் சக்திவேல், அரியலூா் நகர காவல் நிலைய ஆய்வாளா் வெங்கடேஸ்வரன் மற்றும் காவல் உதவி ஆய்வாளா்கள், காவலா்கள், கல்லூரி பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை அக்கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்ட அலுவலரும், சாலை பாதுகாப்பு சங்க ஒருங்கிணைப்பாளருமான வெ. கருணாகரன் செய்திருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.