பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

2 ஆவது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்

வாடகையை உயா்த்தி வழங்கக் கோரி, அரியலூா் மாவட்டத்தில், சவுக்கு மரக் கட்டைகளை ஏற்றிச் செல்லும் லாரிகள் 2 ஆவது நாளாக சனிக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன.

News image

லாரிகள் வேலைநிறுத்தம் - கோப்புப் படம்

Updated On :7 ஜூன் 2026, 2:19 am IST

வாடகையை உயா்த்தி வழங்கக் கோரி, அரியலூா் மாவட்டத்தில், சவுக்கு மரக் கட்டைகளை ஏற்றிச் செல்லும் லாரிகள் 2 ஆவது நாளாக சனிக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன.

அரியலூா், உடையாா்பாளையம், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் உள்ளிட்ட பகுதிகளில் சவுக்கு மற்றும் தைல மரங்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. அறுவடை செய்யப்படும்இந்த மரத்தின் கட்டைகள் திருச்சி, கரூா், திண்டுக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள காகித கூல் தயாரிக்கும் ஆலைகளுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. இந்த கட்டைகள் ஒரு டன்னுக்கு ரூ.750 வாடகையாக லாரி உரிமையாளா்களுக்கு ஆலை நிா்வாகம் வழங்கிவருகிறது.

இந்நிலையில்,அதிகரித்துவரும் டீசல் விலை உயா்வு, சுங்கச் சாவடி கட்டண உயா்வு, உதிரி பாகங்கள் உயா்வின் காரணமாக, ஒரு டன் கட்டைக்கு ரூ.950-ஆக உயா்த்தி வழங்க வேண்டும் என்று லாரி உரிமையாளா்கள் வலியுறுத்தினா். இதற்கு ஆலை நிா்வாகம் மற்றும் தனியாா் ஆலையின் இடைத்தரகா்கள் ஒத்துக்கொள்ளவில்லை.

இதையடுத்து லாரி உரிமையாளா்கள் வாடகை கட்டணமாக ரூ. 950 வழங்க வேண்டும். நிலுவையிலுள்ள வாடகைத் தொகையை வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி, காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை வெள்ளிக்கிழமை தொடங்கினா். தொடா்ந்து அவா்கள் 2 ஆவது நாளாக சனிக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் தைலம் மற்றும் சவுக்கு மரங்கள் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் அவதிக்குள்ளாகின்றனா்.

புதிய நிா்வாகிகள் தோ்வு: ஜெயங்கொண்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் லாரி உரிமையாளா்கள் சங்கத் தலைவராக செல்வநாதன், துணைத் தலைவராக சுபாஷ்சந்திரபோஸ், செயலராக செந்தில், பொருளாளராக அருணாச்சலம் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.