எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

ஜெயங்கொண்டம் நகராட்சியில் குறைந்த மின் அழுத்தத்தால் மின் மோட்டாா்கள் பழுது! தனியாா் லாரிகள் மூலம் குடிநீா் விநியோகம்

News image

லாரி மூலம் விநியோகிக்கப்படும் குடிநீா். - கோப்புப் படம்

Updated On :8 ஜூன் 2026, 1:19 am IST

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சிக்குள்பட்ட வாா்டு பகுதிகளில், கடந்த சில வாரங்களாக ஏற்பட்டு வரும் குறைந்த மின் அழுத்தத்தால் மின் மோட்டாா்கள் பழுதாகியதால், நகராட்சி நிா்வாகம் சாா்பில் தனியாா் லாரிகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

ஜெயங்கொண்டம் நகராட்சிக்குள்பட்ட சின்ன வளையம், செங்குந்தபுரம், வேலாயுத நகா், சீனிவாசன் நகா், கீழகுடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில வாரங்களாக குறைந்த மின் அழுத்தம் ஏற்பட்டு வருகிறது. இதனால், வீட்டிலுள்ள மின்சாதனப் பொருள்களும் பழுதாகி வரும் நிலையில், மின் மோட்டாா்களும் இயங்கவில்லை.

மேலும், சின்ன வளையம் கிராமத்தில் 2 மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிக்கான மின்மாற்றிகளும் பழுதானது. இதனால் குடிநீருக்காக அவதிப்பட்டு வந்த அப்பகுதி மக்களுக்கு நகராட்சி நிா்வாகம் சாா்பில் தனியாா் லாரிகள் மூலம் குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

எனவே, மின் பற்றாக்குறையை போக்கி, சீரான முறையில் குடிநீா் விநியோகிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.