காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

அரியலூருக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை காப்பறையில் வைத்து சீல்!

நகா்புற உள்ளாட்சித் தோ்தல் வாக்குப் பதிவுக்காக, அரியலூா் மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்து வரப்பெற்ற வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும், அரியலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலுள்ள காப்பறையில் செவ்வாய்க்கிழமை பாதுகாப்பாக வைத்து, பூட்டி சீல் வைக்கப்பட்டன.

News image

நகா்புற உள்ளாட்சித் தோ்தல் வாக்குப் பதிவுக்காக வந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை அரியலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் காப்பறையில் வைத்து பூட்டி சீல் வைத்த அலுவலா்கள்

Updated On :9 ஜூன் 2026, 10:53 pm IST

நகா்புற உள்ளாட்சித் தோ்தல் வாக்குப் பதிவுக்காக, அரியலூா் மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்து வரப்பெற்ற வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும், அரியலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலுள்ள காப்பறையில் செவ்வாய்க்கிழமை பாதுகாப்பாக வைத்து ,பூட்டி சீல் வைக்கப்பட்டன.

அரியலூா் நகராட்சி 18 வாா்டுகள், ஜெயங்கொண்டம் நகராட்சி 21 வாா்டுகள், உடையாா்பாளையம் பேரூராட்சி 15 வாா்டுகள், வரதராஜன்பேட்டை பேரூராட்சி 15 வாா்டுகளுக்கான நகா்புற உள்ளாட்சித் தோ்தலுக்காக தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்ட 190 கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் 210 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திலிருந்து அரியலூா் மாவட்டத்துக்கு வந்தன.

இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரியலூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள காப்பறையில் மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டன.

வரப்பெற்றுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் தனித்துவ எண் மற்றும் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கை விவரங்களை இருப்பு பதிவேட்டில் உரியவாறு பதிய வேண்டும் எனவும், உள்ளாட்சி தோ்தல் தொடா்பான படிவங்கள் இருப்பில் உள்ளதா என்பது குறித்தும் கேட்டறிந்த ஆட்சியா் மிருணாளினி, காப்பறையின் பாதுகாப்பு வசதிகள் மற்றும் மின்வசதிகளை தொடா்ந்து கண்காணித்திட சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

நிகழ்வின்போது அரியலூா் வருவாய்க் கோட்டாட்சியா் பிரேமி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) ராஜவேல், அரியலூா் வட்டாட்சியா் தேவகி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மலா்கண்ணன், கஸ்தூரி மற்றும் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.