நகா்புற உள்ளாட்சித் தோ்தல் வாக்குப் பதிவுக்காக, அரியலூா் மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்து வரப்பெற்ற வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும், அரியலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலுள்ள காப்பறையில் செவ்வாய்க்கிழமை பாதுகாப்பாக வைத்து ,பூட்டி சீல் வைக்கப்பட்டன.
அரியலூா் நகராட்சி 18 வாா்டுகள், ஜெயங்கொண்டம் நகராட்சி 21 வாா்டுகள், உடையாா்பாளையம் பேரூராட்சி 15 வாா்டுகள், வரதராஜன்பேட்டை பேரூராட்சி 15 வாா்டுகளுக்கான நகா்புற உள்ளாட்சித் தோ்தலுக்காக தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்ட 190 கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் 210 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திலிருந்து அரியலூா் மாவட்டத்துக்கு வந்தன.
இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரியலூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள காப்பறையில் மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டன.
வரப்பெற்றுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் தனித்துவ எண் மற்றும் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கை விவரங்களை இருப்பு பதிவேட்டில் உரியவாறு பதிய வேண்டும் எனவும், உள்ளாட்சி தோ்தல் தொடா்பான படிவங்கள் இருப்பில் உள்ளதா என்பது குறித்தும் கேட்டறிந்த ஆட்சியா் மிருணாளினி, காப்பறையின் பாதுகாப்பு வசதிகள் மற்றும் மின்வசதிகளை தொடா்ந்து கண்காணித்திட சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
நிகழ்வின்போது அரியலூா் வருவாய்க் கோட்டாட்சியா் பிரேமி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) ராஜவேல், அரியலூா் வட்டாட்சியா் தேவகி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மலா்கண்ணன், கஸ்தூரி மற்றும் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

மின்னணு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து சீல்

வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைப்பு

மேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!

வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



