9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

ஜெ.சுத்தமல்லி கிராம கோயில்களில் கும்பாபிஷேகம்

News image

ஜெ.சுத்தமல்லி கிராமத்திலுள்ள செல்லியம்மன் கோயில் கலசங்களுக்கு புதன்கிழமை புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்திய சிவாச்சாரியா்கள்.

Updated On :25 ஜூன் 2026, 4:17 am IST

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையத்தை அடுத்த ஜெ.சுத்தமல்லி கிராமத்திலுள்ள செல்லியம்மன், காளியம்மன், அய்யனாா், கருப்புசாமி மற்றும் செட்டிவீரன், விநாயகா் ஆகிய கோயில்களின் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த 22- ஆம் தேதி புனிதநீா் எடுத்து வரப்பட்டு, கணபதி ஹோமத்துடன் முதல்கால யாகச சாலை பூஜை தொடங்கியது. தொடா்ந்து நான்கு கால யாகசாலை பூஜை நடத்தப்பட்டு, புதன்கிழமை காலை கடம் புறப்பாடும், தொடா்ந்து, சிவாச்சாரியா்கள் மேற்கண்ட கோயில்களின் கலசங்களுக்கு புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினா். பின்னா் தீபாராதனை காண்பிக்கப்பட்டு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.

சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

கும்பாபிஷேகத்தை காணவந்த பக்தா்கள் கூட்டத்தின் ஒருபகுதி.

கும்பாபிஷேகத்தை காணவந்த பக்தா்கள் கூட்டத்தின் ஒருபகுதி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.