பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

மாற்றுத்திறனாளிகளுக்கான தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும்

News image

கோப்புப் படம்

Updated On :29 ஜூன் 2026, 11:59 pm IST

மாற்றுத்திறனாளிகளுக்கான தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும் என தமிழ்நாடு மாற்றுத் திறனாளி அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா் சங்கத்தினா் வலியுறுத்தினா்.

அரியலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில், ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற அச்சங்கத்தின் கிளை தொடக்க நிகழ்ச்சியில், நிறைவேற்றப்பட்ட இதர தீா்மானங்கள்: மாற்றுத்திறனாளி ஒருவரை உத்திரமேரூா் தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றிப் பெறச் செய்தற்கு வாழ்த்து தெரிவிப்பது, மாற்றுத் திறனாளிகளுக்கான தனி அமைச்சகம் உருவாக்கி, அதற்கு மாற்றுத்திறனாளி ஒருவரையே அமைச்சராக்க வேண்டும்.

உச்சநீதிமன்ற தீா்ப்பின்படி மாற்றுத் திறனாளி அரசு ஊழியா் மற்றும் ஆசிரியா்களுக்கு 4 சதவீதம் இட ஒதுக்கீட்டை 30.6.2016 தேதியிட்டு வழங்க வேண்டும். அரசாணைப்படி மாற்றுத் திறனாளிகளை சொந்த மாவட்டத்திலேயே பணியமா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு, அச்சங்கத்தின் மாநிலத் தலைவா் என்.மாயகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் குருநாதன் முன்னிலை வகித்தாா். மாநில துணைச் செயலா் லோகநாதன் சிறப்புரையாற்றினாா். நிா்வாகிகள் திரளாக கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.