அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா.மல்லிகா தலைமை வகித்து, பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து, அவா்கள் அளித்த 575 மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தவிட்டாா்.
முன்னதாக அவா், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சாா்பில் 1 மாற்றுத்திறன் பயனாளிக்கு காதொலி கருவி, 1 மாற்றுத்திறன் சிறுவனுக்கு நிற்க உதவும் பயிற்சி உபகரணம் மற்றும் 1 மாற்றுத்திறன் பயனாளிக்கு எல்போ ஊன்றுகோல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
கூட்டத்தில், மாவட்ட வழங்கல் அலுவலா் யோகஜோதி மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மக்கள் குறைதீா் கூட்டம்: ரூ. 1.34 லட்சத்தில் 14 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

அரியலூரில் மக்கள் குறைகேட்புக் கூட்டம் 19 திருநங்கைகளுக்கு கடனுதவி

மாற்றுத்திறனாளிகளின் சுய உதவிக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தல்






