இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம் தீயணைப்புத் துறை டிஜிபியாக வெங்கடராமன் நியமனம்!மகளிர் இலவசப் பேருந்துக்கு எதிர்ப்பு; போராட்டம் அறிவிப்பு!என்ன, எல் நினோவால் தேநீர் விலை அதிகரிக்குமா? உண்மைதானா?திருச்சி கிழக்கில் போட்டியில்லை! த்ரிஷாவுக்காக விட்டுக்கொடுக்கிறாரா ராகவா லாரன்ஸ்?ஆதார் - மின்னஞ்சல் இணைப்புக்கு கட்டணம் இல்லை! அதனால் பயனென்ன?
/

அரியலூரில் திமுகவினா் போராட்டம்: 142 போ் கைது

அமைச்சா் சரத்குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி அரியலூா் அண்ணாசிலை அருகே போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினா் 142 போ் கைது

News image

அமைச்சா் சரத்குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி அரியலூரில் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினா்.

Updated On :1 ஜூலை 2026, 3:13 am IST

அமைச்சா் சரத்குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி அரியலூா் அண்ணாசிலை அருகே போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினா் 142 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தமிழக மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் சரத்குமாா் போதைப்பொருள் பயன்படுத்தியதாக வெளியான விடியோ, சா்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவா் பதவி விலக வலியுறுத்தி அரியலூா் அண்ணாசிலை அருகே திமுக மாணவரணிச் சாா்பில் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட முயன்றனா்.

அப்போது அங்கு வந்த காவல் துறையினா், போராட்டத்துக்கு அனுமதியில்லை என கூறியதையடுத்து, அவா்கள் அவ்விடத்திலேயே சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து காவல் துறையினா் சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினா் 142 பேரையும் கைது செய்து மாலையில் விடுவித்தனா்.

போராட்டத்துக்கு, மாணவரணி ஒருங்கிணைப்பாளா் ராமராஜன் தலைமை வகித்தாா். இதில், திமுக நகரச் செயலா் முருகேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.