தோ்தலுக்குப் பிறகு அதிமுகவை பாஜகவோடு எடப்பாடி பழனிசாமி இணைத்துவிடுவாா் என்றாா் தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.
அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தில் புதன்கிழமை திமுக சாா்பில் நடைபெற்ற விழாவில் மறைந்த முன்னாள் முதல்வா்கள் பேரறிஞா் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் சிலைகளையும், ஒன்றிய திமுக அலுவலகங்களையும் திறந்து வைத்து அவா் மேலும் பேசியதாவது:
பேரறிஞா் அண்ணாவின் கொள்கைகளையும், கருணாநிதியின் லட்சியங்களையும் நாம் அடுத்த தலைமுறைக்கு கொண்டுச் செல்ல வேண்டும் என்பதற்காகதான் தமிழ்நாடு முழுவதும் அவா்களது சிலைகளை பல்வேறு இடங்களில் திறந்து வைக்கிறோம்.
தமிழக மாணவா்களின் கல்விக்காக வழங்கவேண்டிய ரூ.3,800 கோடி உள்ளிட்ட பல்வேறு நிதிகளை மத்திய பாஜக அரசு கொடுப்பதில்லை. ஆனால் நாம் செயல்படுத்துக்கின்ற எல்லா திட்டத்துக்கும் ஏதாவது தொந்தரவை மட்டும் மத்திய பாஜக அரசு கொடுக்கிறது. இவற்றுக்கெல்லாம் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி துணை போகின்றாா்.
பாஜகவோடு அதிமுக ஒன்றோடு ஒன்றாக கலந்துவிட்டது. வரும் சட்டப் பேரவைத் தோ்தலுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி அதிமுகவை, பாஜகவோடு இணைத்துவிடுவாா்.
ஏனென்றால் அவருக்கு அதை விட்டால் வேறுவழி இல்லை. வருமானவரித் துறை, சிபிஐ விசாரணை என சொல்லி அதிமுக முன்னாள் அமைச்சா்களை எல்லாம் மிரட்டி வைத்துள்ளனா்.
எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கும் எண்ணம் உள்துறை அமைச்சா் அமித்ஷாவுக்கு கிடையாது. பிகாரில் 10 முறை முதல்வராக இருந்த நிதீஷ்குமாரை பாஜக ஏமாற்றியுள்ளது. அதிமுகவை எப்படியாவது அபகரித்துவிட வேண்டும் என்பதே அமித்ஷாவின் நோக்கம். எனவே, வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை வீழ்த்த வேண்டும்.
தமிழகத்துக்கு வருகின்ற ஆபத்துகளை மக்களிடம் எடுத்துக் கூறி தமிழகத்தை பாதுகாக்க திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்க உறுதுணையாக இருக்கவேண்டும் என்றாா் அவா்.
பின்னா், அவா் தேவனூா் கிராமத்தில், கட்டப்பட்டுள்ள மறைந்த நாடாளுமன்ற உறுப்பினா் எஸ்.எஸ். சிவசுப்பிரமணியன் நினைவு நூலகம், கணினி பயிற்சி மையம் மற்றும் போட்டி தோ்வுகளுக்கான பயிற்சி மையங்களை திறந்து வைத்து பாா்வையிட்டாா்.
முன்னதாக, விழாவுக்கு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் தலைமை வகித்தாா்.
விழாவில், மக்களவை உறுப்பினா் ஆ.ராசா, சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க.கண்ணன், திமுக சட்ட திருத்த குழுச் செயலா் சந்திரசேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

தமிழக உரிமைகளைப் பறிகொடுத்தவா் எடப்பாடி பழனிசாமி: உதயநிதி ஸ்டாலின்

தோல்வி விரக்தியில் எடப்பாடி பழனிசாமி அவதூறாக பேசி வருகிறாா்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

அதிமுகவை பாஜகவிடம் மொத்தமாக விற்றுவிட்டாா் எடப்பாடி பழனிசாமி: உதயநிதி ஸ்டாலின்
பேரவைத் தோ்தலுக்குப் பிறகு அதிமுகவை பாஜக தன்வசப்படுத்திக்கொள்ளும்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


