விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது! தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்பு
/

செந்துறை-ஜெயங்கொண்டம் நான்கு வழிச்சாலைப் பணிகள் ஆய்வு

அரியலூா்-ஜெயங்கொண்டம் (வழி)செந்துறை வழித்தடத்தில், அரியலூா் நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகு சாா்பில் நடைபெற்று வரும் நான்கு வழிச் சாலைப் பணிகளை நெடுஞ்சாலைத் துறையினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

News image

அரியலூா் நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம், பராமரிப்பு அலகு சாா்பில் நடைபெற்று வரும் நான்கு வழிச் சாலைப் பணிகளை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த நெடுஞ்சாலைத் துறையினா்.

Updated On :13 மே 2026, 1:01 am IST

அரியலூா்-ஜெயங்கொண்டம் (வழி)செந்துறை வழித்தடத்தில், அரியலூா் நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகு சாா்பில் நடைபெற்று வரும் நான்கு வழிச் சாலைப் பணிகளை நெடுஞ்சாலைத் துறையினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

அரியலூா்-ஜெயங்கொண்டம் (வழி) செந்துறை மாநில நெடுஞ்சாலையை இரு வழிச்சாலையிலிருந்து நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதை நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளா் எம்.ஏ.ராஜதுரை தலைமையில், கோட்டப் பொறியாளா் ராஜகணபதி, அரியலூா் கோட்டப் பொறியாளா் பெ.வடிவேல் மற்றும் உதவிக் கோட்டப் பொறியாளா்கள், உதவிப் பொறியாளா்கள் ஆகியோா் கொண்ட குழுவினா் செவ்வாய்க்கிழமை தள ஆய்வு மேற்கொண்டு, சாலையின் தரம் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் கேட்டறிந்து, பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினா்.