அரியலூரில் தமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப்பு சாா்பில், தமிழா் கலை இலக்கிய பண்பாட்டுத் திருவிழா புதன்கிழமை இரவு நடைபெற்றது.
அரியலூா் அண்ணாசிலை அருகே நடைபெற்ற விழாவில், இன்றைய சூழலில் தமிழா் பண்பாடு வளா்கிா, தளா்கிா எனும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.
இதில், முனைவா் சா.நீலகண்டன், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியா் சங்க நிறுவனத் தலைவா் அ. நல்லப்பன், பட்டதாரி ஆசிரியா் கனகலெட்சுமி சிவக்குமாா், க.சிவகுருநாதன், கவிஞா் தியாக அறிவானந்தம் உள்ளிட்டோா் பேசினாா். பட்டிமன்றத்தின் நடுவராக மதுக்கூா் ச.ராமலிங்கம் இருந்தாா்.
முன்னதாக, விழாவுக்கு, தமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப்பு தலைவா் சீனி. பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். நிறுவனா் க. ராமசாமி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.செயலா் கதிா்.கணேசன் நோக்கவுரையாற்றினாா்.
விழாவில், மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், கந்தன் காவடி, கரகாட்டம், சிலம்பம், உணவே மருந்து உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தொடர்புடையது

நெமிலி அம்மன் திருவிழா

திருப்பதி கெங்கையம்மன் சிரசு திருவிழா

சைனகுண்டாவில் கெங்கையம்மன் திருவிழா

தமிழ்த் தேசியப் போராளி செல்லப்பா மறைவுக்கு அஞ்சலி
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



