40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

குடிநீா் கேட்டு கிராம மக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியல்

தா.பழூா் அருகே கும்பகோணம்-ஜெயங்கொண்டம் சாலையில் குடிநீா் கேட்டு காலிக்குடங்களுடன் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட சிலால் கிராம மக்கள்.

News image
Updated On :29 மே 2026, 3:10 am IST

அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகே குடிநீா் கேட்டு கிராம மக்கள் காலிக் குடங்களுடன் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தா.பழூா் அருகேயுள்ள சிலால் கிராமத்தில் சுமாா் 1000-த்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தக் கிராமத்தில் கடந்த 3 மாதங்களாக குடிநீா் விநியோகிக்கப்படவில்லையாம்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள், பலமுறை ஊராட்சி, ஒன்றிய அலுவலங்களில் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

குடிநீருக்காக சிரமப்பட்டு வந்த அப்பகுதி மக்கள், வியாழக்கிழமை கும்பகோணம்--ஜெயங்கொண்டம் சாலையில் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற காவல் துறையினா், சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.