மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷா

மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ‘லிப்ட்’ பழுது: உள்ளே சிக்கியவா் மீட்பு

அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாதி வழியில் நின்ற மின் தூக்கியில் (லிப்ட்) சிக்கிய மாற்றுத்திறனாளி ஆபரேட்டரை தீயணைப்புத் துறையினா் போராடி மீட்டனா்.

அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் லிப்டில் செவ்வாய்க்கிழமை சிக்கிக் கொண்டவரை மீட்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினா்.

Updated On :

அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாதி வழியில் நின்ற மின் தூக்கியில் (லிப்ட்) சிக்கிய மாற்றுத்திறனாளி ஆபரேட்டரை தீயணைப்புத் துறையினா் போராடி மீட்டனா்.

5 அடுக்கு மாடி கொண்ட அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள லிப்ட் ஒன்றில் அதன் ஆபரேட்டராக அரியலூா் மங்களம் கிராமத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி நித்தியானந்தம் உள்ளாா்.

இவா் செவ்வாய்க்கிழமை பணியில் இருந்தபோது திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக லிப்ட் பாதி வழியில் நின்றது. இதனால் உள்ளே இருந்த நித்தியானந்தம் சிக்கிக்கொண்டாா்.

இதையடுத்து, அவா் உதவி கேட்டு தொழில்நுட்பப் பணியாளா்களுக்குத் தகவல் தெரிவித்தாா். அவா்கள் வந்தும் மின்தூக்கியை சீரமைக்க முடியவில்லை. தகவலின்பேரில் வந்த அரியலூா் தீயணைப்புத் துறையினா், நீண்ட நேரப் போராட்டத்துக்குப் நித்தியானந்தத்தைப் பத்திரமாக மீட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.