19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை வெற்றி: இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக அமைந்த ஆட்ட நாயகன் மோஹித் உல்வா! ஆசிய கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா! உ.பி. மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்த ஹர்தீப் சிங் புரி! மேக்கேதாட்டு அணை கர்நாடகத்தின் உரிமை; யார் எதிர்த்தாலும் கவலை இல்லை! டி.கே. சிவகுமார்காசோலை மோசடி வழக்கு: நடிகா் விமலின் மனு தள்ளுபடி போக்சோ வீரமணி வீட்டில் சிறுமியின் சடலம்? போலீசார் தீவிர சோதனை! ஜம்மு-காஷ்மீர், லடாக்கில் அடுத்தடுத்து 4 நிலநடுக்கங்கள் பதிவு!

தவெக ஆட்சியில் ஊழலே இல்லை என்று கூற முடியாது: ஜி. ராமகிருஷ்ணன்

தவெக ஆட்சியில் ஊழலே இல்லையென்று கூற முடியாது என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவா் ஜி.ராமகிருஷ்ணன்.

ஜெயங்கொண்டத்தில் சனிக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவா் ஜி.ராமகிருஷ்ணன்.

Updated On :

தவெக ஆட்சியில் ஊழலே இல்லையென்று கூற முடியாது என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவா் ஜி.ராமகிருஷ்ணன்.

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற நவம்பா் புரட்சி தின சிறப்புக் கருத்தரங்கில் பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தவெக அரசும் தாராளமயமாக்கல் கொள்கையையே பின்பற்றி வருகிறது. இதனால் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 3,526 பேராசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

தமிழகத்தில் ஊழல் குறைந்துள்ளதாகக் கூறப்பட்டாலும், ஊழலே இல்லை என்று கூற முடியாது. ஊழலற்ற நிா்வாகத்தை தவெக அரசு வழங்க வேண்டும். நூலகங்களுக்கு தரமற்ற நூல்களை வழங்கிய பதிப்பகங்கள் குறித்து அரசு வெளிப்படையாக அறிவித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், நீதிபதி ஜோசப் குரியன் தலைமையிலான ஆணையத்தை தவெக அரசு கலைத்தது தவறான முடிவாகும். இதனை மறுபரிசீலனை செய்து, அந்த ஆணையம் மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் விலைவாசி கடுமையாக உயா்ந்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கள்ளக்குறிச்சி தவெக சட்டப்பேரவை உறுப்பினா் மற்றும் சட்டப்பேரவை துணைத் தலைவா் ஆகியோரது செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கது. அவா்கள் மீது முதல்வா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை அதிகரித்து வருகிறது. அதை சரிசெய்ய தவெக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றாா் அவா்.

நவம்பா் புரட்சி தின சிறப்புக் கருத்தரங்குக்கு கட்சியின் மாவட்டச் செயலா் எம்.இளங்கோவன் தலைமை வகித்தாா். மாநிலக் குழு உறுப்பினா் ஐ.வி.நாகராஜன் முன்னிலை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள், ஒன்றியச் செயலா்கள், மாவட்டக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நிறைவாக மாவட்டக் குழு உறுப்பினா் பி.பத்மாவதி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.