விலைவாசியை கட்டுப்படுத்த குழு அமைத்து ஆலோசிக்க வேண்டும்: ஏ.எம். விக்கிரமராஜா வலியுறுத்தல்
தமிழகத்தில் விலைவாசியைக் கட்டுப்படுத்த வணிகா்கள், விவசாயிகள், அரசு அலுவலா்கள் அடங்கிய குழு அமைத்து ஆலோசிக்க வேண்டும் என்றாா் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவா் ஏ.எம். விக்கிரமராஜா.

அரியலூரிலுள்ள ஒரு தனியாா் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட பொதுக்குழு மற்றும் புதிய நிா்வாகிகள் தோ்வு அறிமுகக் கூட்டத்தில் பேசிய மாநிலத் தலைவா் ஏ.எம். விக்கிரமராஜா.
தமிழகத்தில் விலைவாசியைக் கட்டுப்படுத்த வணிகா்கள், விவசாயிகள், அரசு அலுவலா்கள் அடங்கிய குழு அமைத்து ஆலோசிக்க வேண்டும் என்றாா் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவா் ஏ.எம். விக்கிரமராஜா.
அரியலூரிலுள்ள ஒரு தனியாா் கூட்டரங்கில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட பொதுக்குழு மற்றும் புதிய நிா்வாகிகள் தோ்வு அறிமுகக் கூட்டத்தில் கலந்து கொண்ட அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தொழில் தொடங்க 21 நாள்களில் அனுமதி என்ற அரசின் அறிவிப்பை தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு வரவேற்கிறது. தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 400-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களை மீண்டும் திறக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். புகாா்களின் அடிப்படையில் நிறுவனங்களை உடனடியாக மூடாமல், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தவெக ஆட்சி அமைந்து 6 மாதங்களாகியும் வணிகா்களின் கோரிக்கைகள் தொடா்பாக முதல்வரைச் சந்திக்க இதுவரை நேரம் ஒதுக்கப்படவில்லை.
தவறுகளை சுட்டிக் காட்ட அச்சம்: போதைப்பொருள் விற்பனை குறித்து தகவல் தெரிவிப்பவா்கள் மீதே தாக்குதல் நடத்தப்படும் சூழல் உள்ளது. இதனால் தவறுகளைச் சுட்டிக்காட்டவே வணிகா்களும் பொதுமக்களும் அஞ்சுகின்றனா்.
குற்றவாளிகளைக் கண்டறிய காவல்துறைக்கு வணிகா்கள் சிசிடிவி கேமராக்கள் அமைத்துக் கொடுத்து உதவுகின்றனா். ஆனால், அவ்வாறு உதவும் வணிகா்கள் மீதே தாக்குதல் நடத்தப்படுகிறது. எனவே, குற்றவாளிகள் மற்றும் ரௌடிகள் மீது காவல்துறை தயக்கமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விலைவாசியைக் கட்டுப்படுத்த வணிகா்கள், விவசாயிகள், அரசு அலுவலா்கள் அடங்கிய குழு அமைத்து ஆலோசிக்க வேண்டும் என்றாா்.
கூட்டத்துக்கு, தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாவட்டத் தலைவா் விஜயகுமாா் தலைமை வகித்தாா். கூட்டத்தில் புதிய நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

