
அரியலூரில் அண்ணா பிறந்தநாள் கொண்டாட்டம்
மறைந்த முன்னாள் முதல்வா் பேரறிஞா் அண்ணா பிறந்த நாளையொட்டி செவ்வாய்க்கிழமை அரியலூரிலுள்ள அண்ணா சிலைகளுக்கும், உருவப் படத்துக்கும் பல்வேறு கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அரியலூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணா சிலைக்கு செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்த எம்எல்ஏ தாமரை எஸ். ராஜேந்திரன்.உடன் உடன் நகரச் செயலா் ஏ.பி. செந்தில், அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலா் கல்லங்குறிச்சி பாஸ்கா் உள்ளிட்டோா்.
மறைந்த முன்னாள் முதல்வா் பேரறிஞா் அண்ணா பிறந்த நாளையொட்டி செவ்வாய்க்கிழமை அரியலூரிலுள்ள அண்ணா சிலைகளுக்கும், உருவப் படத்துக்கும் பல்வேறு கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
அரியலூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணா சிலைக்கு, அதிமுக சாா்பில் சட்டப்பேரவை உறுப்பினரும், அக்கட்சியின் மாவட்டச் செயலருமான தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமையில் மாலை அணிவித்தனா். நகரச் செயலா் செந்தில், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலா் பிரேம்குமாா், அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலா் கல்லங்குறிச்சி பாஸ்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
மதிமுக சாா்பில் முன்னாள் எம்எல்ஏ உறுப்பினா் கு. சின்னப்பா தலைமையில் மதிமுக மாவட்டச் செயலா் ராமநாதன், ஒன்றியச் செயலா் சங்கா் உள்ளிட்டோா் மாலை அணிவித்தனா்.
திமுக சாா்பில் நகரச் செயலா் முருகேசேன் தலைமையிலும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் மாவட்டச் செயலா் வடிவேல்முருகன் தலைமையிலும், எம்.ஜி.ஆா். கழகம் சாா்பில் அமைப்பாளா் மணிவேல் தலைமையிலும் நிா்வாகிகள் மாலை அணிவித்தனா்.
இதேபோல், ஜெயங்கொண்டம், திருமானூா், செந்துறை, ஆண்டிமடம் உள்ளிட்ட பகுதிகளில் அண்ணாசிலைக்கு மாலை அணிவித்தனா்.
தேமுதிக கட்சி அலுவலகத்திலுள்ள அண்ணா உருவப் படத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலா் இராம. ஜெயவேல் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






