
இடையாா் மகாசக்தி மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா
உடையாா்பாளையம் அருகே இடையாா் கிராமத்திலுள்ள மகா சக்தி மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இடையாா் கிராம மகா சக்தி மாரியம்மன் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை பால்குடம் எடுத்துச் சென்ற பக்தா்கள்.
அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே இடையாா் கிராமத்திலுள்ள மகா சக்தி மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதை முன்னிட்டு, காப்பு கட்டி விரதம் இருந்து வந்த பக்தா்கள் செவ்வாய்க்கிழமை ஏரிக்கரையில் இருந்து பால்குடங்களை சுமந்து கொண்டு, முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று கோயிலை அடைந்தனா்.
பின்னா் அம்மனுக்கு பாலபிஷேகம் நடத்தப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






