6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம் இன்று தொடக்கம்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க வந்தவா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

உயிரிழப்பு - பிரதிப் படம்

Published On :

அரியலூா் நீதிமன்றத்தில், ஒரு வழக்கு விசாரணைக்காக திங்கள்கிழமை சாட்சியம் அளிக்க வந்தவா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

அரியலூா், அம்பேத்கா் தெருவைச் சோ்ந்தவா் மா.செல்வம்(55). திங்கள்கிழமை இவா், ஒரு வழக்கு விசாரணைக்காக அரியலூா் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க வந்தாா். அப்போது திடீரென மயங்கி விழுந்தாா்.

நீதிமன்ற ஊழியா்கள் உடனே அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து காவல் துறையினா் விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.