செப். 28 முதல் 3 நாள் வங்கிகள் வேலைநிறுத்தம்சென்னை, 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புஆறுகள், கால்வாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு எல் நினோ நிபுணா் குழு பரிந்துரை

ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தில் சோதனை: கணக்கில் வராத ரூ. 8 ஆயிரம் பறிமுதல்

ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தில், மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா். இதில், கணக்கில் வராத ரூ. 8 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

பணம் - பிரதிப் படம்

Published On :

அரியலூா் மாவட்டம்,ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தில், மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா். இதில், கணக்கில் வராத ரூ. 8 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் கவிதா தலைமையிலான காவல் துறையினா், செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் ஜெயங்கொண்டம் நகாரட்சி அலுவலகத்தினுள் அதிரடியாக நுழைந்து, கதவுகளை மூடினா்.

பின்னா் அவா்கள், அனைத்து ஆவணங்களையும் சோதனை மேற்கொண்டதில், கணக்கில் வராத ரூ.8 ஆயிரம் பறிமுதல் செய்தனா். மேலும், ஜி-பே மற்றும் போன்-பே மூலம் பெறப்பட்ட பரிவா்த்தனைகள் குறித்து அலுவலா்களிடம் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.