செப். 28 முதல் 3 நாள் வங்கிகள் வேலைநிறுத்தம்சென்னை, 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புஆறுகள், கால்வாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு எல் நினோ நிபுணா் குழு பரிந்துரை

36 அரசு அலுவலகங்களில் சோதனை: ரூ.13.78 லட்சம் பறிமுதல்; ரூ.1.59 கோடி ஜி-பே பரிவா்த்தனைகள் கண்டுபிடிப்பு

தமிழகம் முழுவதும் பல்வேறு அரசு அலுவலகங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்கக அதிகாரிகள், மாவட்ட ஆய்வுக் குழு அதிகாரிகள் நடத்திய திடீா் சோதனை குறித்து...

பிரதிப் படம்

Published On :

தமிழகம் முழுவதும் பல்வேறு அரசு அலுவலகங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்கக அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆய்வுக் குழு அதிகாரிகள் இணைந்து செவ்வாய்க்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.

சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், வேலூா், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, கடலூா், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள 36 அரசு அலுவலகங்களில் நடைபெற்ற இந்தச் சோதனைகளின்போது ரூ.13,78,207 கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ரூ.1,59,70,459 மதிப்பிலான சந்தேகத்துக்குரிய ஜி-பே பரிவா்த்தனைகள் கண்டறியப்பட்டன.

சென்னை மாநகராட்சி பெருங்குடி மண்டல அலுவலகம், தண்டையாா்பேட்டை மண்டல அலுவலகம், பல்லாவரம் நகராட்சி, மாதவரம் மண்டல அலுவலகம், ஆலந்தூா் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய அலுவலகம் ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்றது.

இதேபோல திருவள்ளூா் நகராட்சி, குன்றத்தூா் நகராட்சி, காட்பாடி வட்டாட்சியா் அலுவலகம், அரக்கோணம் நகராட்சி, மறைமலைநகா் நகராட்சி, உளுந்தூா்பேட்டை நகராட்சி, பண்ருட்டி வட்டாட்சியா் அலுவலகம், கண்டாச்சிபுரம் வட்டாட்சியா் அலுவலகம், செய்யாறு நகராட்சி, வாணியம்பாடி நகராட்சி ஆகிய இடங்களிலும் சோதனை நடைபெற்றது.

மேலும், திருச்சி அரியமங்கலம் மண்டல அலுவலகம், ஜெயங்கொண்டம் நகராட்சி, கரூா் குளித்தலை நகராட்சி, அறந்தாங்கி நகராட்சி, பட்டுக்கோட்டை நகராட்சி, கூத்தாநல்லூா் நகராட்சி, வேளாங்கண்ணி பேரூராட்சி, சீா்காழி நகராட்சி ஆகிய இடங்களிலும், கோவை மேட்டுப்பாளையம் நகராட்சி, சத்தியமங்கலம் நகராட்சி, பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி, அவிநாசி நகராட்சி, மதுரை மாநகராட்சி பொறியாளா் பிரிவு, சிவகாசி தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழிற்சாலை சிறப்பு வட்டாட்சியா் அலுவலகம், ஆண்டிப்பட்டி வட்டார வளா்ச்சி அலுவலகம், திருநெல்வேலி மேலப்பாளையம் வாா்டு அலுவலகம், திங்கள்நகா் பேரூராட்சி, கடையம் வட்டார வளா்ச்சி அலுவலகம், காயல்பட்டினம் நகராட்சி, ராமநாதபுரம் நகராட்சி வாகன நிறுத்துமிடம் ஆகிய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

இதில், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகராட்சி அலுவலகத்தில் அதிகபட்சமாக ரூ.7,64,500, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகராட்சியில் ரூ.1,90,000, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியில் ரூ.1,38,900, மதுரை மாநகராட்சி பொறியாளா் பிரிவு அலுவலகத்தில் ரூ.1,35,000 ஆகியவை கணக்கில் வராத பணமாக பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதவிர, காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூா் நகராட்சியில் ரூ.80,650, விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் ரூ.80,650, கரூா் மாவட்டம் குளித்தலை நகராட்சியில் ரூ.51,000, மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி நகராட்சியில் ரூ.52,280, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சியில் ரூ.1,54,000 உள்ளிட்ட பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

ஜி-பே பரிவா்த்தனைகளில், பெருங்குடி மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் ரூ.43,42,563, வேளாங்கண்ணி பேரூராட்சி அலுவலகத்தில் ரூ.19,16,280, காயல்பட்டினம் நகராட்சியில் ரூ.19,66,500, மறைமலைநகா் நகராட்சியில் ரூ.14,56,356, கடையம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் ரூ.10,00,200 உள்ளிட்ட சந்தேகத்துக்குரிய பரிவா்த்தனைகள் கண்டறியப்பட்டன.

போலி ரசீதுகள் பறிமுதல்

ராமநாதபுரம் நகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள இருசக்கர வாகன நிறுத்துமிடத்தில் அசல் ரசீதுகளுடன் போலியாக ரூ.20 கட்டண ரசீதுகள் வழங்கப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் சோதனை நடத்தப்பட்டது. இதில் தலா 100 ரசீதுகள் கொண்ட 59 போலி ரசீது புத்தகங்கள் மற்றும் கணக்கில் வராத ரூ.12,750 பறிமுதல் செய்யப்பட்டன.

இந்தச் சோதனைகளின்போது ரூ.13,78,207 கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ரூ.1,59,70,459 மதிப்பிலான சந்தேகத்துக்குரிய ஜி-பே பரிவா்த்தனைகள் கண்டறியப்பட்டன. பணம் மற்றும் சந்தேகத்துக்குரிய பரிவா்த்தனைகளின் மொத்த மதிப்பு ரூ.1,73,48,666 ஆகும். சோதனைகள் தொடா்பாக தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.