தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!

தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை நடைபெறுவது பற்றி...

raid

சித்திரிப்பு - Dinamani

Published On :

தமிழ்நாட்டில் உள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

திமுக முதன்மைச் செயலரும், முன்னாள் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவுமான கே.என். நேரு, அவரது சகோதரா் கே.என். ரவிச்சந்திரன் ஆகியோா் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிா்வாகத் துறையில் பல்வேறு வகைகளில் ரூ.1,020 கோடி வரை ஒப்பந்த முறைகேடு செய்துள்ளதாகவும், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் அமலாக்கத் துறை தமிழக டிஜிபிக்கு கடந்த டிசம்பா் மாதம் கடிதம் அனுப்பியது.

திமுக ஆட்சியில் இருந்த வரையில் இந்தக் கடிதத்தின் அடிப்படையில் தமிழக காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. தவெக தலைமையில் ஆட்சி அமைந்த பின்னா், இந்தக் கடிதத்தின் அடிப்படையில் தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக கடந்த 5-ஆம் தேதி கே.என்.நேரு தொடா்புடைய 30 இடங்களில் அந்தப் பிரிவினா் சோதனை நடத்தி, 241 ஆவணங்களைக் கைப்பற்றினா்.

இந்த நிலையில், மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஏற்கெனவே, கடந்த மாதம் வட்டாட்சியா் அலுவலகங்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், பதிவுத்துறை அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

Raids conducted at 40 Municipal Administration Department offices in Tamil Nadu!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.