மே 15, 16-களில் கரூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறார்.
இதுகுறித்து கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் நன்னியூர் ராஜேந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மே 15-ம் தேதி மாலை கரூர் நகராட்சி அலுவலகம் அருகில் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி திமுக சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்கிறார். மே 16-ம் தேதி முன்னாள் மாவட்டச் செயலர் வாசுகி முருகேசன் இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்கிறார்.
பின்னர், கலைஞர் அறிவாலயத்தில் நடைபெறும் மாவட்ட, ஒன்றிய, நகர பேரூர் கழக திமுக இளைஞர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
இதையொட்டி மே 15-ம் தேதி காலை 10.30 கரூருக்கு வரும் மு.க. ஸ்டாலினுக்கு கரூர் திருச்சி புறவழிச்சாலையில், கட்டளை பிரிவு சாலை அருகே 500 இரு சக்கர வாகனங்களில் திமுக இளைஞர் அணி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இதில் திமுகவினர் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காங்கிரஸ் குறித்த திமுகவின் விமா்சனம் ஏற்புடையதல்ல: காா்த்தி சிதம்பரம்

தொல்லியல் துறை மேற்பாா்வையில் குற்றாலம் பிரதான அருவி மேம்பாட்டுப் பணிகள்: உயா்நீதிமன்றம் உத்தரவு

மாணவா் சங்கத்தினா் முற்றுகைப் போராட்டம்

ஆணவக் குற்றங்களுக்கு எதிராக சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் - எவிடென்ஸ் அமைப்பு
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
