கரூர் மாவட்டத்தில் "அம்மா' திட்ட சிறப்பு முகாம் மே 14 -ம் தேதி 8 இடங்களில் நடைபெற உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வருவாய்த் துறை சார்பில் மக்களைத் தேடி வருவாய்த் துறை "அம்மா' திட்ட சிறப்பு முகாம் மே 14 -ம் தேதி காலை 10 மணி அளவில் கரூர் வட்டத்தில் உள்ள மின்னாம்பள்ளி ஊராட்சி, ஆச்சிமங்கலம் ஊராட்சி, அரவக்குறிச்சி வட்டத்தில் உள்ள வெஞ்சமாங்கூடலூர் (மேல்), நஞ்சைக்காளக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் மகாதானபுரம் (வடக்கு), (ம) கம்மாநல்லூர், குளித்தலை வட்டத்தில் இரணியமங்கலம், வடசேரி, காளையப்பட்டி
ஆகிய 8 ஊராட்சிகளில் நடைபெற உள்ளது.
அந்தந்த வட்டாட்சியர்கள் தலைமையில் நடைபெறும் சிறப்பு முகாமில், தனி வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். முகாமில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை அளிக்கலாம்.
இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, தகுதியான நபர்களுக்கு அன்றைய தினமே நலத் திட்ட உதவிகள் வழங்கப்படும்.
உடனடி தீர்வு காண இயலாத மனுக்கள் மீது தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, ஒரு மாத காலத்துக்குள் தீர்வு காணப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









