கரூர் அரசு மருத்துவமனையில் ரூ. 26.97 லட்சத்தில் சலவை இயந்திரம் அமைக்கும் பணி நடைபெறுவதை மக்களவை துணைத் தலைவர் மு. தம்பிதுரை மற்றும் தொழில்துறை, போக்குவரத்துத் துறை அமைச்சர் பி. தங்கமணி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
கரூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் துணிகளைச் சலவை செய்ய கரூர் மக்களவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூ. 26.97 லட்சம் மதிப்பில் நீராவி சலவை இயந்திரம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை மக்களவை துணைத் தலைவர் மு. தம்பிதுரை, தொழில்துறை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் பி. தங்கமணி ஆகியோர் சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி, மாவட்ட வருவாய் அலுவலர் மு. அருணா, எம்எல்ஏக்கள் வி. செந்தில்பாலாஜி, செ. காமராஜ், அரசு மருத்துவமனையின் சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் சந்திரன், நகர்மன்றத் தலைவர் செல்வராஜ், துணைத் தலைவர் ஏ.ஆர். காளியப்பன், கரூர் ஒன்றியக் குழுத் தலைவர் எஸ். திருவிகா, நகராட்சி பொறியாளர் புண்ணியமூர்த்தி மற்றும் அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

