ஆரணி அருகே பாகிஸ்தான் உளவாளி கைது சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு அரசு எப்போது டெண்டர் விட்டது? உதயநிதி ஸ்டாலின் கேள்வி ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்! அமைச்சர் ரமேஷ்மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! நேஹா போரா

எதிர்க்கட்சியினரை மக்கள் நம்பத் தயாராக இல்லை: அமைச்சர் உதயகுமார் பேச்சு

பொய்ப் பிரசாரம் செய்து வரும் காலாவதியான எதிர்க்கட்சியினரை நம்ப தமிழக மக்கள் தயாராக இல்லை என்றார் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்.

Updated On :

பொய்ப் பிரசாரம் செய்து வரும் காலாவதியான எதிர்க்கட்சியினரை நம்ப தமிழக மக்கள் தயாராக இல்லை என்றார் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்.

கரூர் மாவட்ட ஜெ. பேரவை சார்பில் வாக்குச்சாவடி வாரியாக வாக்கு சேகரிப்பாளர்களுக்கு சனிக்கிழமை கரூரில் நடைபெற்ற வழிகாட்டும் முகாமில் பங்கேற்று மேலும் அவர் பேசியது:

தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகளின் பல்வேறு சூழ்ச்சிகள், சோதனைகள் எல்லாம் முறியடித்து பல சாதனைத் திட்டங்கள் தந்து மக்கள் பணியாற்றிவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க ஜெ. பேரவை சார்பில் தமிழகத்தில் உள்ள 50 மாவட்டங்களில் உள்ள 65,000 வாக்குச் சாவடிகளில் வாக்கு சேகரிப்பாளர்களுக்கான வழிகாட்டுதல் முகாம் நடைபெறுகிறது.

கரூர் மாவட்டத்தில் உள்ள 1,006 வாக்குச் சாவடிகளில் வாக்குச் சேகரிப்பாளர் பணிக்கான விண்ணப்பம் இந்நிகழ்ச்சியில் வழங்கப்பட உள்ளது. தமிழகத்தின் நிரந்தர முதல்வர் ஜெயலலிதாதான். ஆனால் காலாவதியான எதிர்கட்சித் தலைவர்கள் பொய்ப் பிரசாரம் செய்கின்றனர். தமிழக மக்கள் அவர்களை நம்பத் தயாராக இல்லை. அதற்கு காரணம் முதல்வர் ஜெயலலிதா வழங்கி வரும் சாதனைத் திட்டங்களே.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக வெற்றி பெறுவது உறுதி. அதிமுகவின் சாதனைத் திட்டங்களை வாக்காளர்களிடம் எடுத்துக் கூற வேண்டும். ஜெயலலிதா வழங்கி வரும் அரிய நலத்திட்டங்களை பெறாத வாக்காளர்களே இல்லை. எனவே வாக்கு சேகரிப்பாளர் வீடு வீடாகச் சென்று சாதனைகளை எடுத்துக் கூறி எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாரங்களை முறியடிக்க வேண்டும்.

இன்றளவும் கரூர் அதிமுகவின் எக்கு கோட்டையாக திகழ்கிறது. எனவே மீண்டும் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியை அமைத்து புதிய சாதனைகளை படைக்க சூளுரைப்போம் என்றார்.

மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை பேசுகையில், மக்களால் நான், மக்களுக்காக நான் என்ற குறிக்கோளுடன் ஆட்சி நடத்தி வரும் முதல்வர் ஜெயலலிதாவின் சாதனைகளை மக்களிடையே எடுத்துச் செல்லும் அரிய பணிகளை திறம்பட செய்திட வேண்டும் என்றார். மாவட்ட ஜெ.பேரவை செயலரும், கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏவுமான செ. காமராஜ் தலைமை வகித்தார்.

இதில் அமைச்சர் தங்கமணி, எம்.எல்.ஏக்கள் பாப்பாசுந்தரம், செந்தில்பாலாஜி ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட துணைச் செயலர் காளியப்பன், தொகுதிச் செயலர் எஸ். திருவிகா, ஒன்றியச் செயலர்கள் கமலக்கண்ணன், மார்க்கண்டேயன், விஜயபாஸ்கர், முத்துசாமி, பொருளாளர் முரளி, நகரச் செயலர் நெடுஞ்செழியன், நகர்மன்றத் தலைவர் தமிழ்நாடு செல்வராஜ், மாவட்ட இளைஞரணி செயலர் கோயம்பள்ளி பாஸ்கரன், நகர இளைஞரணி செயலர் சேரன்பழனிசாமி,முன்னாள் நிர்வாகிகள் இளைஞர் பாசறை செந்தில்நாதன், சாகுல்அமீது, பசுவை சிவசாமி உள்ளிட்ட மாவட்ட, நகர, ஒன்றிய மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.