கரூரில் ஏஐடியுசி கட்டுமானத் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக, கரூர் காமராஜர் சிலையில் இருந்து ஊர்வலமாகச் சென்ற கட்டுமானத் தொழிலாளர்கள் தாலுக்கா அலுவலகம் முன்பு முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், கட்டுமானத் தொழிலைக் காப்பாற்று, வேலையிழந்த தொழிலாளிகளுக்கு நிவாரணம் கொடு, மணல் இறக்குமதியை ஊக்கப்படுத்து, மாற்று மணல் உற்பத்தியை உத்திரவாதப்படுத்து, புலம்பெயரும் தொழிலாளர் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும், பதிவு இல்லாத மூத்த கட்டட தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்பாட்டத்துக்கு, மாவட்டத்தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் வடிவேலன் விளக்கவுரையாற்றினார். பூங்கொடி, சித்திரைச் செல்வி, சந்திரா, மணிமேகலை, ரெங்கநாதன் மற்றும் குப்புசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ராமசாமி, சாத்தப்பன், கந்தசாமி, சக்திவேல், சுரேஷ், முத்துவீரன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். கலாராணி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.