மாற்று திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம்

கரூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாற்று திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் ஆட்சியர் தலைமையில் அண்மையில்(டிச. 26) நடைபெற்றது. 
Updated on
1 min read

கரூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாற்று திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் ஆட்சியர் தலைமையில் அண்மையில்(டிச. 26) நடைபெற்றது. 
முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் கு. கோவிந்தராஜ் தலைமை வகித்து மேலும் பேசியது:  
கரூர் மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் மாற்று திறனாளிகளுக்கான  சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. வரும் வெள்ளிக்கிழமை (டிச. 29) கிருஷ்ண ராயபுரம், ஜனவரி 3 இல் தாந்தோன்றிமலை, ஜனவரி 5 ஆம் தேதி கடவூர், 10 ஆம் தேதி அரவக்குறிச்சி,12 ஆம் தேதி தோகைமலை, 19  ஆம் தேதி க. பரமத்தி மற்றும் 24 ஆம் தேதி கிருஷ்ணராய புரத்திலும் ந டைபெற உள்ளது என்றார். முகாமில், மாவட்ட ஆட்சியர் கு. கோவிந்தராஜ், 5 மாற்று திறனாளிகளுக்கு தலா 50 ஆயிரம் மதிப்பில் மொத்தம் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான காசோலைகள் வழங்கினார். 
முகாமில், கூட்டுறவு சார் பதிவாளர் சீனிவாசன், கரூர் கோட்டாட்சியர் கு.சரவண மூர்த்தி, மாற்று திறனாளி நலத்துறை அலுவலர் காமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com