ரூ. 1 கோடியே 34 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
க. பரமத்தி ஒன்றியம், கோடந்தூர் ஊராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் ரூ. 1கோடியே 34 லட்சத்து 66 ஆயிரம் மதிப்பிலான


க. பரமத்தி ஒன்றியம், கோடந்தூர் ஊராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் ரூ. 1கோடியே 34 லட்சத்து 66 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு ஆட்சியர் கு.கோவிந்தராஜ் வழங்கினார்.
முகாமிற்கு கரூர் வருவாய் கோட்டாட்சியர் கு. சரவண மூர்த்தி தலைமை வகித்தார். அரவக்குறிச்சி வட்டாட்சியர் சந்திரசேகர் வரவேற்றார்.
முகாமில், 130 பேருக்கு ரூ.39 லட்சம் மதிப்பில் விலையில்லா வீட்டு மனைப்பட்டா, 40 பேருக்கு 48 லட்சம் மதிப்பில் முதியோர் உதவித்தொகை, 68 பேருக்கு ரூ.1,63,990 மதிப்பில் கல்வி உதவித் தொகை, 9 பேரின் குடும்பங்களுக்கு இயற்கை மரண உதவித்தொகை, திருமண உதவித் தொகை ரூ. 8 ஆயிரம், 62 பேருக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டு, பட்டா நகல் 60 பேருக்கும்,தோட்டக் கலைத் துறை மூலம் 5 பேருக்கு ரூ. 26,500 மதிப்பில் உதவிகள் என 483 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 34 லட்சத்து 66 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் கு.கோவிந்தராஜ் வழங்கினார்.
இதில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.கவிதா, மகளிர் திட்ட இயக்குநர் பால கணேஷ், வேளாண்மை இணை இயக்குநர் பாஸ்கரன், கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குநர் கதிர் வேல், ஆதி திராவிட நலத்துறை நல அலுவலர் பாலசுப்பிரமணியம், மாற்று திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி உள்ளிட்ட 9 துறை அலுவலர்கள் பங்கேற்றனர். சமூக பாதுகாப்பு வட்டாட்சியர் மூர்த்தி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...