"பொதுமக்கள் குடிநீர்த் தொட்டிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்'

பொதுமக்கள் குடிநீர்த் தொட்டிகளை வாரம் ஒரு முறை சுத்தம் செய்து, காற்று புகாதாவாறு மூடி வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
Updated on
1 min read

பொதுமக்கள் குடிநீர்த் தொட்டிகளை வாரம் ஒரு முறை சுத்தம் செய்து, காற்று புகாதாவாறு மூடி வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
 கரூர் நகராட்சிக்கு உள்பட்ட தாந்தோணி பாரதிதாசன் நகர், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் புன்னம்காலனி, புன்னம்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை வீடு, வீடாகச் சென்று டெங்கு தடுப்புப் பணிகளை ஆட்சியர் ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், பொதுமக்கள் தங்களது வீடுகளில் உபயோகமற்ற பொருள்களை சேமித்து வைக்க வேண்டாம்.
 வீடுகளின் சுற்றுப்புறங்களில் நீர் தேங்காதவாறு தூய்மையாக வைத்திருக்க வேண்டும். சுகாதாரப் பணியாளர்கள் வீடு தேடி வரும்போது, கொசுமருந்து அடிக்கவும், நீர் சேமிப்பு தொட்டிகளில் கொசுப்புழுவை அழிக்கும் அபேட் மருந்து மற்றும் பிளீச்சிங் பவுடர் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.  குடிநீர் தொட்டிகளில் மூன்று நாள்களுக்கு மேல் தண்ணீரை திறந்த நிலையில் சேமித்து வைக்கக் கூடாது. வாரம் ஒருமுறை தொட்டிகளை நன்றாக சுத்தம் செய்த பின்னர், தண்ணீரை சேமிக்க வேண்டும். மேலும், காற்றுப் புகாதவாறு தொட்டிகளை மூடி வைக்க வேண்டும்.   உணவு விடுதிகள், இறைச்சிக் கடைகள் தங்களது கழிவுகளை உரிய இடத்தில் மட்டுமே அப்புறப்படுத்த வேண்டும். மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றார். இந்த ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.கவிதா, நகராட்சி ஆணையர் ப.அசோக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் தண்டபாணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com