வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

அமராவதி ஆற்றுப் பாலத்தை திறக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

அமராவதி ஆற்றின் குறுக்கே மேலப்பாளையம் மற்றும் கோயம்பள்ளி இடையே கட்டப்பட்டுள்ள உயர்மட்டப் பாலத்தை திறக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :16 நவம்பர் 2017, 8:08 pm

DIN

அமராவதி ஆற்றின் குறுக்கே மேலப்பாளையம் மற்றும் கோயம்பள்ளி இடையே கட்டப்பட்டுள்ள உயர்மட்டப் பாலத்தை திறக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
 கரூரில் அக்கட்சியின் மாவட்டக்குழுக்கூட்டம் தாந்தோணிமலை அலுவலகத்தில் அண்மையில் பி.கே.முருகேசன் தலைமையில்நடைபெற்றது. 
கூட்டத்தில் பெருந்துறை 
முன்னாள் எம்எல்ஏ நா.பெரியசாமி மற்றும் கட்சியின் மாவட்டச் செயலாளர் கேகே.பெரியசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். 
இதில், விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மீது போடப்பட்ட வழக்குகளை தமிழக அரசு உடனடியாக வாபஸ்பெற வேண்டும். 
டெங்கு காய்ச்சலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைவருக்கும் சுத்தமான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
கரூர் மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் கொசு மருந்து அடிக்க வேண்டும்.  கரூர் நகரில் பாதாள சாக்கடை பணிகளை முடித்து போக்குவரத்தை சீர்படுத்த வேண்டும். 
 கரூர் அமராவதி ஆற்றின் குறுக்கே மேலப்பாளையம், கோயம்பள்ளி இடையே கட்டப்பட்டுள்ள உயர்மட்டப்பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்கு உடனடியாக திறந்துவிட வேண்டும். 
 அரவக்குறிச்சி-கரூர் வழித்தடத்தில்  மாலை நேரத்தில் அரசுப் பேருந்துகளை கூடுதலாக இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர்கள் எம்.ஷேசன், உடையவர்மோகன், பொருளாளர் ஆர்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.