குடிநீரில் குளோரின் அளவினை ஆட்சியர் ஆய்வு

கரூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவு சரியாக உள்ளதா என மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
Updated on
1 min read

கரூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவு சரியாக உள்ளதா என மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
 கரூர் நகராட்சிக்கு உட்பட்ட கோடாங்கிப்பட்டி, கோடாங்கிப்பட்டி தெற்கு, ராயனூர், தில்லை நகர், காமராஜர் மார்க்கெட், இரட்டை வாய்க்கால், க.பரமத்தி  ஒன்றியம் காட்டுமுன்னூர் ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை டெங்கு தடுப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 அப்போது, ராயனூரில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரில் குளோரின் அளவு சரியாக உள்ளதா என ஆட்சியர் ஆய்வு செய்தார்.  பின்னர், அப்பகுதியில் தனியார் காலியிடங்களில் உபயோகமற்ற பிளாஸ்டிக் பொருள்கள், டயர்களை அப்புறப்படுத்தும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  இதைத்தொடர்ந்து, கோடாங்கிப்பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்த ஆட்சியர், அப்பகுதி மக்களிடம் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். பின்னர் இரட்டைவாய்க்கால் தூர்வாரும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 ஆய்வின்போது, ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.கவிதா, நகராட்சி ஆணையர் ப.அசோக்குமார், தனித்துணை ஆட்சியர்(சமூகபாதுகாப்புத்திட்டம்) ஜான்சிராணி, கரூர் வட்டாட்சியர் அருள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com