குளித்தலையில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
குளித்தலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


குளித்தலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குளித்தலை வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் தங்கவேல் தலைமை வகித்தார். இதில், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக்குழு அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டிப்பது, வேளாண் விஞ்ஞானி சாமிநாதன் குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும், நங்கவரம் பகுதியில் தலித் மக்களுக்கு அரசு வங்கிகளில் கடனுதவி வழங்க வேண்டும், குளித்தலை அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவில் முறையாக மருந்துகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகள் சங்க துணைத் தலைவர் ஷேசன், நிர்வாகிகள் ராஜேந்திரன், மகாலிங்கம், லோகு உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...