வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தேசிய ஜூடோ போட்டியில் பதக்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு

தேசிய அளவிலான ஜூடோ போட்டியில் கரூர் பரணி வித்யாலயா பள்ளி மாணவி வெண்கல பதக்கம் பெற்றார்.

News image
Updated On :16 நவம்பர் 2017, 8:09 pm

DIN

தேசிய அளவிலான ஜூடோ போட்டியில் கரூர் பரணி வித்யாலயா பள்ளி மாணவி வெண்கல பதக்கம் பெற்றார்.
சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கிடையே தேசிய அளவிலான ஜூடோ  போட்டி, ஹைதராபாதில் கடந்த 8-ஆம்தேதி முதல் 12-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் தென்மண்டலம் சார்பில் 8 மாநிலங்களை உள்ளடக்கிய பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.   கரூர் பரணி வித்யாலயா பள்ளியில் இருந்து 12 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். 
இதில், 5-ம் வகுப்பு மாணவி அட்சயா 11 வயதுக்குட்பட்டோருக்கான 30 கிலோ எடைப்பிரிவில் வெண்கலம் வென்றார்.  
வெற்றி பெற்ற மாணவியையும், பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கும் கரூர் மாவட்ட ஜூடோ சங்கம் மற்றும் கரூர் பரணிபார்க் கல்விக்குழும நிர்வாகம் சார்பில் பாராட்டப்பட்டனர்.
 விழாவுக்கு பரணிபார்க் கல்விக்குழும தாளாளர் எஸ்.மோகனரெங்கன் தலைமை வகித்தார். செயலர் பத்மாவதி மோகனரெங்கன் முன்னிலை வகித்தார். முதன்மை முதல்வர் சொ.ராமசுப்ரமணியன், முதல்வர் எஸ்.சுதாதேவி, துணை முதல்வர் பிரியா உள்ளிட்டோர் மாணவர்களை பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.