கோம்புபாளையம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மண்டலத் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமார் தலைமை வகித்தார். இதில் 2017-18-ம் ஆண்டுக்கான 2-ம் கட்ட விலையில்லா வெள்ளாடுகள் வழங்குவதற்காக 34 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் கூட்டுறவு வங்கித்தலைவர் ரங்கநாதன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ், கால்நடை மருந்தக உதவியாளர் மாலதி மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர் திரளாக பங்கேற்றனர். ஊராட்சி செயலர் அனிதா வரவேற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.