கரூரில் டெங்கு தடுப்பு பணிகள்:ஆட்சியர் ஆய்வு

கரூர் வடக்கு காந்திகிராமம் பகுதியில் நடைபெற்று வரும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை ஆட்சியர் கு.கோவிந்தராஜ் புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Updated on
1 min read

கரூர் வடக்கு காந்திகிராமம் பகுதியில் நடைபெற்று வரும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை ஆட்சியர் கு.கோவிந்தராஜ் புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கரூர் நகராட்சிக்குட்பட்ட 36-வது வார்டில் உள்ள 5 தெருக்கள் மற்றும் இபி காலனி, ஜெஜெ.கார்டன், அன்புநகர் உள்ளிட்ட பகுதிகளிலும் ஆட்சியர் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது 60 நகராட்சி துப்புரவுப்பணியாளர்கள் 20 கொசுப்புழு அழிக்கும் பணியாளர்கள் என 80 பேர் கொண்ட குழுவினர் டெங்கு தடுப்பு பணிகள் மேற்கொண்டு வருவதையும், அவர்கள் வீடு, வீடாகச் சென்று குடிநீர் சேகரிப்புத்தொட்டிகளை ஆய்வு செய்து கொசுப்புழு வளர்ச்சியை தடுக்கும் அபேட் மருந்துகள் நீரின் அளவிற்கு ஏற்ப ஊற்றுவதையும் பார்வயிட்டார்.  
பின்னர் கழிவு நீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்படாமல் கழிவு நீர் வெளியேற்றப்படும் பணியையும் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளில் உள்ள குப்பைகள், புற்கள், பயன்பாடற்ற டயர்கள், தேங்காய் மூடிகள் உடனுக்குடன் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் மூலம் அகற்றப்படுவதையும் பார்வையிட்ட அவர், ஈரப்பதம் உள்ள பகுதிகளில் பிளிச்சிங் பவுடர் தெளிக்க உத்தரவிட்டார். பின்னர் ஒவ்வொரு வீட்டிலும் பயன்பாடற்ற ஓடுகள், பிளாஸ்டிக் டப்பாக்களை அப்புறப்படுத்த குடியிருப்புவாசிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
பின்னர் அப்பகுதியில் உள்ளவர்களிடம் குடியிருப்போர் நலச் சங்கம் உருவாக்கி அதன்மூலம் குப்பைகளை குப்பைத்தொட்டிகளில் மட்டுமே போட வேண்டும். பாலித்தீன் பைகள் மற்றும் உணவுக்கழிவுகளை கழிவுநீர் கால்வாயில் போடக்கூடாது. நீர் சேகரிப்புத் தொட்டிகளை கொசுக்கள் புகாத வகையில் மூடி வைக்க வேண்டும். சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என தங்களுக்குள்ளாகவே தீர்மானங்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றார்.
ஆய்வின்போது, நகராட்சி ஆணையர் ப.அசோக்குமார், நகர்நல அலுவலர் தேவேந்திரன், பூச்சியியல் வல்லுநர் மதியழகன், கரூர் வட்டாட்சியர் அருள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com